#Breaking ஜன.18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பிள்ளைகளுடன் பள்ளிகளுக்குச் சென்றுள்ளதால், போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் சொந்த ஊருக்குத் திரும்ப காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றும், அன்றைய தினம் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என்றும் உறுதியாக அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.