#Breaking நாளை முதல் மீண்டும் கொரோனா பரிசோதனை; அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு!

நாளை 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களில் ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் புதிய வகை வைரஸான ஓமைக்ரானில் இருந்து உருவான BF.7 என்ற திரிபு வைரஸ் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரி 5.87 லட்சமாக உள்ள நிலையில், இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு சராசரி 153 என்ற அளவில் உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலே கொரோனா பாதிப்பு உள்ளது கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவிற்கு யாரும் பழியாகவில்லை மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாளை 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களில் ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.