Connect with us

#BREAKING மாணவர்களுக்கு குட் நியூஸ்… இவர்களுக்கு இறுதித்தேர்வுகள் கிடையாது… பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

சிறுவன்

செய்திகள்

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மே மாதம் 5 முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.அதேபோல் ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும்.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இல்லை. 2022-2023 ஆம் கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் தொடங்கும்.

பதினொன்றாம் வகுப்புக்கு ஜூன் 24 முதல் வகுப்புகள் தொடங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top