#Breaking இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் இழப்பு; சோகத்தில் மூழ்கிய உறவுகள்!

இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், பழம்பெரும் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருமான எஸ்.வி,ரமணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், தளபதி விஜய் என முன்னணி நடிகர்கள் பலரது படத்திற்கும் அனிருத் இசையமைத்த பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் பட்டி, தொட்டி எல்லாம் பட்டையக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்துவந்த அனிருத்தின் தாத்தா எஸ்.வி. ரமணன் வயது மூப்பால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுப்பது, ஆன்மீகம் சம்பந்தமாக ஆவணப்படங்கள் தயாரிப்பது போன்ற விஷயங்களை செய்துள்ளார். குறிப்பாக 80 மற்றும் 90களில் இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்துள்ளார். தொலைக்காட்சி, விளம்பரம், வானொலி, திரைப்படம் என நூற்றுக்கணக்கானவற்றிற்கு இசையமைத்துள்ளார்.

இன்று மாலை எஸ்.வி.ரமணனின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...