BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக போட்டி… வேட்பாளர் யார் தெரியுமா? 

தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என  பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.