#Breaking தமிழகத்தில் பிப்.27ம் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 3ம் தேதி  காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அதிகாலை மரணமடைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்திருந்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு  தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனுடன் சேர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செலவினத்தை கட்டுப்படுத்தும் வழக்கமான நடவடிக்கையாக 3 மாநில தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.