#Breaking திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்; அறிவாலயம் அதிரடி அறிவிப்பு!

திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் உட்கட்சி தேர்தல் நடத்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வரும் சூழலில் கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 22ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது திமுகவின் 15 ஆவது மாவட்ட அமைப்பு பொது தேர்தலுக்குக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்ததை அடுத்து 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் – மதியழகன் (செங்குட்டுவன்)

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் – பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் ( இன்பசேகரன்)

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் – மதுரா செந்தில் (மூர்த்தி)

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் – தளபதி முருகேசன்

கோவை வடக்கு மாவட்ட செயலாளர் – தொண்டாமுத்தூர் ரவி

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் – அண்ணாதுரை (ஏனாதி பாலசுப்ரமணியன் )

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் – சந்திரன் (பூபதி )

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment