#Breaking திண்டுக்கல்லில் பரபரப்பு; காவல்துறை துறைக்கு பாஜக மாவட்ட தலைவர் கெடு!

திண்டுக்கல் மாவட்ட பாஜக நிர்வாகி வாகனங்களுக்கு தீ வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

திண்டுக்கல் குடை பாறைப்பட்டியில் இன்று 24.09.22 அதிகாலை பாஜக நிர்வாகி செந்தில் பால்ராஜ் குடோனில் வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாது மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்து சேதமானது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலையில் உள்ள குடை பாறைப்பட்டி பிரிவில் 70க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர் இதனை அடுத்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் தனபால் செய்தியாளிடம் பேசுகையில் :- நாளை காலைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர் அவர்களுக்கு உறுதியை ஏற்று  தற்பொழுது கலைந்து செல்வதாகவும் நாளை காலைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment