#Breaking லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

தருமபுரியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவுளூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த கார கட்டுப்பாடை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், தரும்புரியைச் சேர்ந்த ராகுல், சந்தோஷ், ஜீவபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணித்த கவியரசு, கார்த்திக் ஆகியோர் விபத்தில் படுகாயம் அடைந்ததை அடுத்து, சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமபுரி போலீசார், விபத்து குறித்தும், அதற்கான காரணம் பற்றியும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment