#Breaking அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் சுற்று நிறைவு; 7 பேர் காயம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாடு முட்டியதால் 6 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 62 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இதில் 3 காளைகளை அடங்கிய சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபால்கிருஷ்ணன் என்பவர் முதலிடத்திலும், 2 காளைகளை அடங்கிய செந்தமிழ் செல்வன் என்ற இளைஞர் 2வது இடத்திலும் உள்ளனர். முதல் சுற்று போட்டியில் காளைகள் தாங்கியதில் 3 மாடுபிடி வீரர்களும், 3 மாட்டின் உரிமையாளர்களும் காயம் அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.