ரஷ்ய கால்பந்து கூட்டமைப்புடனான உறவை தற்காலிகமாக ரத்து செய்வதாக அடிடாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6வது நாளாக உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டப் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா- உக்ரைன் போரில் நடுநிலையை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
உக்ரைன் மீது போர் தொடரும் என்றும், தங்களது இலக்கை அடையும் வரை தாக்குதல் நிறுத்தப்படமாட்டது என்றும் ரஷ்யா பாதுகாபுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை கண்டித்து, அமெரிக்கா, பிரிட்டன் , ஜெர்மனி, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள புதின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
ஷ்ய தேசிய அணி உட்பட அந்த நாட்டின் எந்த அணிகளும் உலக அளவில் கால்பந்து விளையாட்டு தொடர்களில் பங்கேற்க FIFA மற்றும் UEFA அமைப்புகள் இடைக்கால தடை விதித்துள்ளன. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டிக்கும் விதமாக ரஷ்ய கால்பந்து கூட்டமைப்புடனான உறவை தற்காலிகமாக ரத்து செய்வதாக அடிடாஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.