#BREAKING சென்னை மக்களே உஷார்; செம்பரபாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வருவதை அடுத்து சென்னையில் நேற்று காலை முதலே பல்வேறு இடங்களில் பெய்து வந்த சாரல் மழை, மாலை முதல் தீவிரமடைந்தது. நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கடந்த 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இரவு புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருவதால் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 442 கன அடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்த்தேக்கத்தில் 35 அடி மொத்த உயரத்தில் தற்போது 33 உயரத்தில் நீர் உள்ளது.

நீர்த்தகத்தின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனடியில் தற்போது 2521 மில்லியன் கன அடி நீர் இருந்து வருகிறது. எனவே இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.