காலை சிற்றுண்டி திட்டம்: செப். 15-ஆம் தேதி முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இத்தகைய திட்டத்திற்கு உணவு பட்டியல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி காலை முதல் சிறார்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment