50 ஊழியர்களுடன் போலி கால்சென்டர் : உணவு ஆர்டர் செய்ததை வைத்து கண்டுபிடித்த போலீஸ்..!

மும்பையில் 50 ஊழியர்களுடன் போலீஸ் கால்சென்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கான உணவு ஆர்டர் செய்ததை அடுத்து அந்த போலி கால்சென்டரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மும்பையில் உள்ள ராஜோடி என்ற கடற்கரையில் இருந்து தினமும் ஒரு ஹோட்டலுக்கு 50 ஊழியர்களுக்கான தேநீர் மற்றும் காலை உணவு ஆகியவை ஆர்டர் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் இருக்கும் நிலையில் எதற்காக இவ்வளவு உணவு ஆர்டர் செய்யப்படுகிறது என போலீசார் சந்தேகம் அடைந்தனர்

இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட கட்டிடத்தை ரகசியமாக போலீசார் கண்காணித்த போது அதன் உள்ளே சட்டவிரோத செயல் நடைபெறுவதை கண்டுபிடித்து அதிரடியாக போலீசார் உள்ளே சென்று சோதனை செய்தபோது அங்கு 50 ஊழியர்களுடன் போலி கால்சென்டர் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் டஜன் கணக்கான காலை உணவுகள் அதிகாலை நான்கு மணிக்கு டீ, காப்பி உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்த இடத்தை சந்தேகம் அடைந்த போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர் இதனை அடுத்து அங்கு விசாரணை செய்த போது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு போலி வங்கிக்காக அவர்கள் வேலை செய்து வந்ததாகவும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களிடம் கால் சென்டர் ஊழியர்கள் பேசி அவர்களுடைய பாஸ்வேர்டை ஏமாற்றி பெற்று சட்டவிரோத செயல்கள் செய்து வந்ததாகவும் ஏராளமான  பணம் சம்பாதித்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த கால் சென்டர் உரிமையாளர் மற்றும் 49 ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏமாற்றுதல் ஆள்மாறாட்டம் செய்தல் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில்  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களை இந்த போலி கால் சென்டரில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைத்து அவர்களிடமிருந்த தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பாதுகாப்பு தகவல்களை பெற்று மோசடி செய்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி கால் சென்டரில் இருந்த கம்ப்யூட்டர் உள்பட அனைத்து சாதனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது போன்ற கால் சென்டர் இன்னும் அதிக அளவில் இந்தியாவில் இயங்கி வருகிறது என்றும் அந்த அனைத்து கால்சென்டர்களையும் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.