நாளையோடு முடிவுக்கு வருகிறது பிராவோவின் ஆட்டம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங்கை விட தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிராவோ.பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர் என்றால் பேட்டிங் அல்லது பௌலிங் இதில் ஏதேனும் ஒன்றை சிறப்பாக செய்பவராக காணப்படுவர். ஆனால் இரண்டிலும் சிறந்தவராக 18 ஆண்டுகளாக ஜொலித்துக் கொண்டு உள்ளார் பிராவோ.பிராவோ

தற்போது பிராவோ ஓய்வை அறிவித்தார். அதன்படி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பிராவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அபுதாபியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பொலார்ட் ஓய்வு அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரை தொடர்ந்து தற்போது தனது ஓய்வு குறித்து உறுதி செய்துள்ளார் பிராவோ. இவர் பேட்டிங் ,பவுலிங் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 18 ஆண்டுகளாக தங்கள் தனது பங்களிப்பை அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டில் ஓய்வை அறிவித்த பின்னர் 2019 இல் தனது முடிவை மாற்றிக் கொண்டார் ஆல்ரவுண்டர்  பிராவோ. இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 1245 ரன்கள் மற்றும் 78 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment