‘டாஸ்மாக் பரிதாபங்கள்’ எக்ஸ்ட்ரா விலைக்கு சரக்கு விற்பனை; அபராத வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா?

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை: கடந்த 10 மாதங்களில் ரூ. 5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை சென்னை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் டாஸ்மாக மதுக்கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்ற 4,658 விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 5.49 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு MRP விட கூடுதலாக விலையை வைத்து விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ரூ. 5 கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ரூ. 5,900,
ரூ. 7 கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ரூ. 8,260,
ரூ. 10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ரூ. 11,800 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என காசிமாயன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டாஸ்மாக் நிறுவனம்,

தமிழ்நாடு முழுவதும் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்வதை தடுக்க ஆய்வு மேற்கொண்டதில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை என 10 மாதங்களில் 29 மாவட்டங்களில் 4,658 விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து 5 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

29 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 397 விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 46 லட்சத்து 84 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.