பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஒரு பரிகாரம்

a673581ffc18645e0fc6d77e8342f8ef

பிரம்மஹத்தி தோஷம் என்பது ஜாதக ரீதியாக சிலருக்கு இருக்கும் தோஷமாகும். இந்த தோஷம் வாழ்வில் பல தடைகளை ஏற்படுத்தும் முன்னேறவே விடாது என்பது பலரும் அனுபவ பூர்வமாக உணர்ந்துகொண்ட உண்மை. குருவும், சனியும் ஜாதகத்தில் பொருத்தமற்ற இடங்களில் இணைந்து இருந்தால் இப்படி ஒரு விசயங்களை காணலாம்.

இதற்கு திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்று தோஷப்பரிகாரம் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் இன்னொரு வழியை சொல்கிறார் ஜோதிடமேதை சிவ சேதுபாண்டியன் அவர்கள். இவர் சமீபத்தில் மறைந்துவிட்டார்.

பஞ்சக்கூட்டு எண்ணெய் என்று கடைகளில் கிடைக்கும் நல்ல ஒரிஜினலான இந்த  எண்ணெய் கொண்டு சிவன் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகள், சிறு சிலைகள் ஆனாலும் தவறாமல் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று செய்தால் நலம். தொடர்ந்து செய்து வர கொஞ்சம் கொஞ்சமாக பிரம்மஹத்தியால் ஏற்படும் காரியத்தடைகள், வாழ்வில் எதுவுமே நல்லபடியாக நடக்காமல் இருப்பது போன்ற நிகழ்வுகள் மாறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.