பிரமோஸ் ஏவுகணை விவகாரம்: 3 அதிகாரிகள் பணிநீக்கம்!!

கடந்த மார்ச் மாதம் பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் 124 கிமீ எல்லை தாண்டி விழுந்ததாக பாகிஸ்தான் அரசு தனது குற்றச்சாட்டை முன்வைத்தது.

இத்தகைய செயலுக்கு இந்திய பாதுகாப்புத் துறை ஏவுகணை தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் கொடுத்தப்போதிலும், சீனாவுடன் சேர்ந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் குரூப் கேப்டன், விங் கமாண்டர், ஸ்குவாட்ரன் லீடர் ஆகிய விமானப் படை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற தவறுகள் மேலும் நடக்காதவாறு அனைத்து  விமானப் படை அதிகாரிகளும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று  மத்திய அரசு கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment