Entertainment
பாய்ஸ் படம் இரண்டாம் பாகம் வருகிறதா
கடந்த 2003ல் வெளிவந்த படம் பாய்ஸ். சமூக படங்களாக எடுத்து கொண்டிருந்த ஷங்கர் இப்படத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் இளைஞர்களுக்கு உண்டான அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்களை அதிகம் சேர்த்து ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதித்தார்.

பிரபல பத்திரிக்கையான விகடன் ச்சீ என ஒற்றை வரி விமர்சனம் எழுதியது.
சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன், காமெடிக்கு விவேக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.
அதன் பின் உடனடியாக அந்நியன் படத்தை தொடங்கிய ஷங்கர் பாய்ஸ் படத்தில் விழுந்த தவறான இமேஜை துடைத்து கொண்டார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பாய்ஸ் 2 படம் தொடங்கப்படுவதாக செய்திகள் கசிந்த நிலையில்
இதனை அந்த படத்தில் நடித்த இசையமைப்பாளர் தமன் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதை ஷங்கர்தான் இயக்குவாரா என தெரியவில்லை ஏனென்றால் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
