Connect with us

காதலியின் நெஞ்சில் தனது பெயரை பச்சை குத்த கட்டாயப்படுத்திய காதலன் கைது!!

kaithu 1

தமிழகம்

காதலியின் நெஞ்சில் தனது பெயரை பச்சை குத்த கட்டாயப்படுத்திய காதலன் கைது!!

முன்னர் காலத்தில் இருந்த போல் தற்போது காதல் காணப்படவில்லை. ஏனென்றால் காதலர்கள் காதலிகள் பல்வேறு விதமான கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காதலன் ஒருவர் தனது பெயரை பச்சை குத்த வேண்டும் என்று கூறியதெல்லாம் பிரேக் அப் ஆகி கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் 18 வயதிலேயே இளம் பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு வருகிறார். தோழி மூலம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி அபினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மணி கணக்கில் செல்போனில் மயக்கும் விதமாக பேசி பொழுதை கழித்த அந்த மாணவி அபினேஷ் இன் காதல் வலையில் விழுந்தார். காதல் ஜோடி இருவரும் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று செல்போனில் செல்பி எடுத்து சுற்றி திரிந்துள்ளனர்.

மாணவி எங்கே தன்னை விட்டு விட்டு சென்று விடுவாரோ என்று சந்தேகித்து தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்த வேண்டும் என்று நிபந்தனை செய்துள்ளார் அபினேஷ். அப்போதுதான் நீ உண்மையாக காதலிக்கிறாய் என நம்புவேன் என்று காதலிக்க நிபந்தனை மற்றும் அந்த மாணவி பச்சை குத்த மறுத்ததால் ஆத்திரம் அடைந்துள்ளார் அபினேஷ்.

எனவே செல்போனில் நாம் பேசிய குரல் பதிவுகள் மற்றும் ஜோடியாக எடுத்த செல்பி களைப் பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனவும் மிரட்டி உள்ளார் காதலன். மிரட்டலுக்கு பணியாத அந்த மாணவியோ பிளாக் மெயில் செய்த அபினேஷன் பெயரை பச்சை குத்து காதலை பிரேக் அப் செய்தார்.

ஆத்திரம் அடைந்த அபினேஷ், மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பாக ஆபாசமாக பேசியுள்ளான். மாணவியை தொடர்ந்து தொடர்பு கொண்டு உன்னை இனிமேல் வாழ விட மாட்டேன் எனவும் மிரட்டி உள்ளார்.

தொல்லை தாங்க முடியாத மாணவி தந்தையுடன் சென்று இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதிலிருந்து புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளையும் கைப்பற்றினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top