ஆசிட் கலந்த குளிர்பானத்தில் மாணவன் பலி – பள்ளி குறித்து வெளியான பகீர் தகவல்..!!

குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மெதுகும்மல் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவருக்கு 11-வயதில் அஸ்வின் என்ற மகன் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்ற சிறுவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஆசிட் திரவம் குடித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆதின மடங்கள் செயல்பாடு: ஐகோர்ட் கிளை அதிரடி..!!!

இதனால் குடல் பகுதி முழுவதும் புண்ணாகிவிட்டதாகவும், இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதன் படி, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் உயிரிழந்த பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment