சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்!

daac674298483295353b931eb57f1833

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் என்பதும், இவரது படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் நல்ல வசூலை குவிக்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது என்பதும் இந்த குழந்தை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடி உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமானார். இதனையடுத்து இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்து 18 வருட கனவு நனவானது என்றும் தனது தந்தையே தனது மகனாக பிறந்து உள்ளார் என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் 

சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 18 வருடம் கழித்து என் அப்பா என் விரலைப் பிடித்து இருக்கிறார்கள் மகனாக’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்’ என்று பதிவு செய்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.