வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் : முதல்வர் அதிரடி அறிவிப்பு !!!

சட்டப்பேரவையில் ஊரகத் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்  பேசிய  முதல்வர்  வடசென்னையில் ரூ.10 கோடி செலவில் குத்துச்சண்டை மைதானம் அமைக்கப்படும் என்று  அறிவித்தார்.

இந்நிலையில் விளையாட்டு என்பது வெற்றியோ தோல்வியோ என்ற மனப்பக்குவத்தை தருவதோடு மட்டுமில்லாமல் நேர்மையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதாக அவர் கூறினார்.

இதனிடையே பன்னாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து 3 கோடி முதல் ஊக்கத்தொகைகளை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

அந்த வகையில் சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் ’ மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் வடசென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டு திறமைகள்  கொண்ட  அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் அமைப்பதாக கூறினார்.

இதற்காக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரூ.10 கோடி செலவில் குத்துச்சண்டை மைதானம் அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment