குறையொன்றுமில்லை கற்குவாரிகளில்- பின் கரை படுத்த முயல்வது ஏன் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் துரைமுருகன் கேள்வி கேட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது கனிமவளத்துறை ஒருவருக்கு மட்டுமே குத்தகைக்கு விட்டார் என்றும் துரைமுருகன் கூறினார்.
கல்குவாரி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கனிம வளத்துறை பற்றி யார் மூலமோ தெரிந்துகொண்டு எடப்பாடிபழனிசாமி அறிக்கை வெளியிட்டதே பெரிய விஷயம்தான் என்றும் துரைமுருகன் கூறினார்.
கல்குவாரி நடத்துவோர் ஆண்டுக்கு எவ்வளவு ஜல்லி உற்பத்தி செய்வோம் என்பதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். விரிவான சுரங்கத் திட்டம் மூலம் அரசுக்கு தெரிவித்த பின்னரே கல்குவாரிதாரர்களுக்கு அனுமதி தரப்படுகிறது என்றும் கூறினார்.
குவாரி குத்தகைதாரர்கள் உடன் ஏற்பட்ட உறவால் அரசுக்கு வருவாய் வந்துவிடக்கூடாது என பழனிச்சாமிக்கு நல்லெண்ணம் என்றும் கூறினார். மகத்தான நல்லெண்ணத்துடன் ஒரு நொண்டி காரணத்தை கூறியிருக்கிறார் எடப்பாடிபழனிசாமி என்றும் துரைமுருகன் கூறினார்.
குவாரிகளில் பண்டிகை காலத்தில் தொழிலாளர்கள் உற்பத்தி குறையும் என பழனிசாமி பச்சாதாபம் புரிகிறார். பர்மிட் முறை தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளதாக கூறிய தகவல் உண்மையில்லை என்றும் துரைமுருகன் கூறினார்.
வீடியோ அரசு ஆளும் கட்சியை கவனித்துவிட்டு…. என திமுக அரசு மீது கடினமான சொற்களை பழனிசாமி பயன்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி விரும்பினால் கடந்த பத்தாண்டுகளில் கனிமவளத்துறையின் கதைகளை தயார் என்றும் துரைமுருகன் கூறினார்.
மொட்டை பெட்டிசன் மீது எல்லாம் அரசு முடிவு எடுத்துள்ளதாக எடப்பாடிபழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மொட்டை பெட்டிஷனிலும் பெட்டி சமாச்சாரம் நிறையவே உள்ளதே! என்று அமைச்சர் துரைமுருகன் தன் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.