Connect with us

பரிதாபம்: திருமணமாகி 6 நாளில் புதுமண தம்பதிகள் இருவரும் தற்கொலை

156511 death1

தமிழகம்

பரிதாபம்: திருமணமாகி 6 நாளில் புதுமண தம்பதிகள் இருவரும் தற்கொலை

திருமணம் ஆகி ஆறு நாளில் மனைவி விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில்  புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செவரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் சந்தியா என்பவருக்கும் கடந்த ஒன்பதாம் தேதி மணமகன் இல்லத்தில்  உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சந்தியாவிற்கு மயக்கம் வந்த நிலையில்  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சந்தியா உயிரிழந்தார் மனைவி உடலை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வந்த முருகன் தனது சொந்த கிராமமான குந்தலம்பட்டு கிராமத்திற்கு வந்து அவரது நிலத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அவலூர்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெவ்வேறு இடங்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top