முதல்வர், முன்னாள் முதல்வர் இருவரும் பின்னடைவு! மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக!!
இன்றைய தினம் இந்திய அளவில் எதிர்பார்ப்புள்ள தினமாக காணப்படுகிறது. ஏனென்றால் இன்று கடந்த மாதத்தில் தொடங்கிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டு வருகிறது.
இதில் மத்தியில் ஆளும் பாஜக 4 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளதாக காணப்படுகிறது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக காணப்படுகிறது. அதன்படி 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் தேர்தல் முடிவில் பாஜக நாற்பத்தி ஐந்து இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் 22 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. பகுஜன் சமாஜ்வாதி இரண்டு இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக காணப்படுகிறது. முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி 16 வாக்குகளில் பின்னடைவில் உள்ளார். முன்னாள் முதல் அமைச்சர் ஹரீஷ் ராவத் பாஜக வேட்பாளர் இடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
