கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் பள்ளியில் பதிவாகி இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து பல கோணங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் மாணவியில் பெற்றோர் அரசியல் தலைவர்களை சந்தித்து தங்களுடைய மகளுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கத்தில் கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் படி, தற்போது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-ஐ சந்தித்த ஸ்ரீமதியிம் பெற்றோர் மாணவியின் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதோடு அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என ஸ்ரீமதி தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும், சிபிசிஐடி மேல் முழு நம்பிக்கை உள்ளது, வேறு விசாரணை தேவையில்லை என்றும் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் முரணாக உள்ளதாக ஸ்ரீமதி பெற்றோர் கூறியுள்ளனர்.