Connect with us

மாஸ்டர் பிளான் போட்டு 125 கோடி ஆட்டையைப் போட்ட எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி

Untitled 58

செய்திகள்

மாஸ்டர் பிளான் போட்டு 125 கோடி ஆட்டையைப் போட்ட எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி

மாஸ்டர் பிளான் போட்டு 125 கோடி ஆட்டையைப் போட்ட எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி

ஹரியானா மாநிலத்தில் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் பல மோசடி செய்து ரூ.125 கோடி சம்பாதித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ப்ரவீன் யாதவ் ஆவார். இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் மாவட்டத்தின் அருகே உள்ள மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக வேலை பார்ப்பதாகக் கூறி பல வகையான மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.ப்ரவீன் துவக்கத்தில் குடும்பத்திற்குத் தெரியாமல் தனி ஆளாக களம் இறங்கி சிறு மோசடிகளாக செய்துவந்துள்ளார்.

நாளடைவில் இவர் மனைவி மம்தா யாதவ் மற்றும் ஆக்சிஸ் பேங்க் மேலாளரான சகோதரி ரிது ஆகியோரின் ஆதரவுடன் கோடிக் கணக்கிலான மோசடி பிசினஸில் களம் இறங்கியுள்ளார்.

என்எஸ்ஜி வளாகத்தில் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெறுவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்த நிலையில், இவரிடம் ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் ப்ரவீன் பங்குச் சந்தையில் ரூ.60 லட்சம் இழந்ததாகவும், அதன் பின்னர் கடும் விரக்தியில் இருந்தபோது இழந்த பணத்தை மீட்க எண்ணி இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியின் மோசடி செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top