60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளுங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் உள்ள 90% பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தி உள்ள நிலையில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று முதல்வரின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர்கள் பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதியில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர்

கொரோனா , வைரஸ், பூஸ்டர்,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.