ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!!
ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதே போல 60 வயது மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நாடுமுழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி முதலில் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் போடப்படும் என்றும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இதனிடையே 18 வயது மேற்பட்டவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு 9 மாதாம் முடிந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 96% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாகவும், 83% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.
