தொடர்ச்சியாக பூஸ்டர் ஊசி செலுத்துவதால் மக்களிடையே ஊசி மீது அதிருப்திதான் வரும்- ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு

கடந்த 2019 இறுதியில் ஊகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் 2020 ஆரம்பத்தில் பலரை அச்சுறுத்தியது.

இத்தாலி, இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டது.

பின்பு மீண்டும் 2021ல் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டதால் அதிகம் பேர் இறப்பை தழுவினர்.

இதற்காக முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முதலில் ஒரு ஊசி போட்டால் போதும் என்ற சொன்ன நிலையில் பிறகு இரண்டு ஊசி போட வேண்டும் அதுவும் ஒன்றாக போடக்கூடாது தனித்தனியாக இடைவெளி விட்டு போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது இரண்டு ஊசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பலர் பூஸ்டர் ஊசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக பூஸ்டர் தவணை ஊசி தடுப்பூசி செலுத்தி கொள்வது கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை அளிக்காது என ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது  நோய் எதிர்ப்பாற்றலை மந்தப்படுத்தும் பொதுமக்களிடையே தடுப்பூசி மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாகவே அமையும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment