18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டராக செலுத்தி கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதோடு கோவாக்சின், கோவிஷீல்டு போட்டிருந்தாலும் போர்பவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இத்தகைய வைரஸை தடுக்க பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடித்த போதிலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் ‘கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை கடந்த சில தினங்களுக்கு முன் கண்டுப்பிடித்தது. இந்த தடுப்பூசியை 2-ம் தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
குறிப்பாக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு பரிந்துரை ஒப்புதலுக்காக காத்திருந்தது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டராக செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.