முக்கியமான செய்தி: தமிழகத்தில் இனி வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்!
தமிழகத்தில் வாரா வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் இனி வாரத்திற்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அதன்படி இனி வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் வீடு தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கி வருகிறோம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், கொரோனா பரவலின் வேகம் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுவது பொதுமக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்துள்ளது.
