Connect with us

இன்று முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ்: சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

booster vaccination camp

Tamil Nadu

இன்று முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ்: சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

இன்று முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ்: சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் 18- வயது  மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பரிந்துறை செய்தது. அதே போல 60 வயது மேற்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நாடுமுழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இந்த தடுப்பூசி முதலில் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் போடப்படும் என்றும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே 18 வயது மேற்பட்டவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு 9 மாதாம் முடிந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு சேவைக்கட்டணம் அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷான் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top