புத்தக கண்காட்சி: ஆறு பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது-வழங்கினார் கலைஞர் மகன்!
இன்றைய தினம் முதல் தமிழகத்தில் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சியை திறந்து வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை நந்தவனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தக கண்காட்சி விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கியுள்ளார்.
அதன்படி ஆறு பேருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார். இதில் கலைஞர் பொற்கிழி மற்றும் பபாசி விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்துகிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
தமஸ், ஆசைதம்பி, வெண்ணிலாவுக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டுள்ளது. அதோடு பிரசன்னா ராமசாமி, பால் சக்காரியா, மீனா கந்தசாமிக்கும் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்ணழகு, திருவை பாபு, தேவிராவுக்கு பபாசி விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்.
