ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு இன்று தொடக்கம்;

இந்தியாவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சிறார்களுக்கு கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகைய தடுப்பூசி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CoWin  இணையதளத்தில் ஆதார், பாஸ்போர்ட், பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படவுள்ளது.

இந்த நிலையில் சிறார்களுக்கு கோவாக்சின்  தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளில் மையம் அமைக்க போதிய இடம் ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு கோவாக்சின்  தடுப்பூசி போடுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக மருத்துவத்துறை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment