விரைவுப்பேருந்தில் ஜனவரி 16ம் தேதி காண முன்பதிவு நிறுத்தம்! பொங்கலுக்காக ஊருக்கு செல்பவர்கள் திரும்ப முடியுமா?

தைத்திங்கள் முதல்நாள் தமிழகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடப்படும். இதற்காக அனைவரும் காலையில் எழுந்து விட்டு, புத்தாடை அணிந்து பொங்கல் பொங்கலோ பொங்கலென்று கூறி பொங்கலிட்டு மகிழ்வர். அதற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அதன்பின்னர் காணும் பொங்கல் என வரிசையாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

 

இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை புரியும் மக்கள் தமது சொந்த ஊருக்கு விரைந்து திரும்புவார். ஆனால் நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இரவு நேர ஊரடங்குகளில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடரும் என்றும் கூறியிருந்தது.

இதனால் மக்கள் ஓரளவு நிம்மதியில் இருந்த நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 16ஆம் தேதிக்கு விரைவு பேருந்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி காண முன்பதிவு நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஜனவரி 16ஆம் தேதி காண முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்புவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

வரும் 9ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என்பதால் அன்று முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார். ஜனவரி 16 ஆம் தேதி பயணிகள் பயணிக்க சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசின் உத்தரவை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் 16ஆம் தேதி முழு ஊரடங்கா? இல்லையா? என்பதில் குழப்பம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment