நாளை மறுநாள் சென்னையில் புத்தகக் கண்காட்சி-தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!
நம் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலில் இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்ல திரும்பப்பெறப்பட்டது. குறிப்பாக ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டது. அதேவேளையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருப்பது. இதற்காக பபாசி சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45 வது புத்தகக் கண்காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி 16ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் நுழைவு கட்டணமாக ரூபாய் பத்து ரூபாய் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
