Connect with us

புத்தகப்பைகளில் கட்சி தலைவர்களின் படங்கள் கூடாது!!

News

புத்தகப்பைகளில் கட்சி தலைவர்களின் படங்கள் கூடாது!!

672a20c4067e74a19340cc50aa84b43b

தற்போது நம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.. ஏராளமான பள்ளி மாணவர்கள் சென்று மகிழ்ச்சியோடு பாடங்கள் படிக்கின்றனர். மேலும் பல மாதங்களுக்குப் பின்பு பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் காணப்படுகிறது. மேலும் கல்லூரியும் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை போன்றவைகள் மக்களுக்கு மிகவும் மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது.9b0ff9d50ac3c7af0a56a0820753bc14

மேலும் அந்த இலவச விநியோகம் பொருட்களில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் காணப்படும். இது குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த புத்தகங்களில் கட்சித் தலைவர்களின் படங்கள் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளவற்றில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் கூடவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்த கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. புத்தகங்களில் தலைவர்களின் படங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது .நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் வழக்கில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

ஏற்கனவே 64 லட்சம் பை,10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்க பட மாட்டாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. 64 லட்சம் பை மற்றும் 10 லட்சம் எழுதுபொருள் மாணவருக்கு தரப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் என்று அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர்கள் படத்துடன் அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடும்படி வாய்மொழி உத்தரவு என மனுவில் கூறப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top