பெரிய பழுவேட்டரையரின் மனைவியை புகழ்ந்து தள்ளும் பார்த்திபன்! பொன்னியின் செல்வன் அப்டேட்!

தென்னிந்திய முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர்.இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ponniyin selvan actor-3

இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.

இதில் ஐஸ்வர்யா ராய் எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என இரட்டை வேடங்களில் அவர் நடிப்பதாக சமூக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன,நந்தினி சோழ சாம்ராஜ்யத்தின் அதிபரும் பொருளாளருமான பெரிய பழுவேட்டரையரின் மனைவி.

‘இந்தியன் 2’ படத்திற்காக போர்கலைகளை பயிலும் காஜல் அகர்வால்! வெளியானஒர்கவுட் புகைப்படம்!

ponnin selvan - ishwarya

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பற்றி ஒரு பாராட்டுப் பத்திரம் பதிவிட்டிருக்கிறார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன். மேலும் சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். தற்போழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment