Connect with us

ஒரு கோடி பார்வை கடந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர்!

ponnin seivan

பொழுதுபோக்கு

ஒரு கோடி பார்வை கடந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர்!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர்.

ponnin selvan - 5

தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.கன்னட மொழியில் ரக்ஷித் ஷெட்டி பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இது தவிர சென்னை டிரேட் சென்டரில் டீசர் வெளியீட்டு விழா எளிய முறையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

62c71a17398e0

யு டியூபில் ஐந்து மொழிகளில் வெளியான இந்த டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே மொத்தமாக ஒரு கோடி பார்வையைக் கடந்துள்ளது. தமிழில் இதுவரையிலும் 55 லட்சம், தெலுங்கில் 25 லட்சம், ஹிந்தியில் 16 லட்சம், மலையாளத்தில் 6 லட்சம், கன்னடத்தில் 1.5 லட்சம் என ஒரு கோடிக்கும் கூடுதலான பார்வைகள் பார்வையிட்டுள்ளனர்.

த்ரிஷா இல்ல, ஆண்ட்ரியாவும் இல்ல – யாருபா ‘சந்திரமுகி 2’ நாயகி?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top