தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில மாதங்களாக அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கும் திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு புரளி மர்ம நபர்கள் ஏற்படுத்தி வருவது வழக்கமாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜீத், தளபதி விஜய் உள்பட பல பிரபலங்களுக்கு ஏற்கனவே கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வெடிகுண்டு புரளிகள் வந்துள்ளன
இந்த நிலையில் சற்று முன்னர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்படைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் இதுவும் வழக்கம் போல் புரளி என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு புரளி கிளப்பிய மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது,