காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 3 தனிப்படை அமைப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் காவல்நிலையத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாட்சி குமரன் நகரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் அமைப்பில் இருந்து சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டன.

இந்நிலையில் பொள்ளாட்சி மேற்கு காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தபால் ஒன்று வந்தது. அதில் பொள்ளாட்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதே போல் காவல்துறை எங்களுக்கு எதிரியல்ல என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் இதனை அனுப்பியது யார்? என்பது குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.