Connect with us

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! போதை ஆசாமியை கைது செய்த போலீஸ்;

மேட்டூர் அணை

தமிழகம்

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! போதை ஆசாமியை கைது செய்த போலீஸ்;

நம் தமிழகத்தில்  சில நாட்களாக அதிகம் பேசப்படும் வார்த்தையாக மாறி உள்ளது மேட்டூர் அணை. ஏனென்றால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மேட்டூர் அணை மே மாதத்திலேயே நீர் பாசனத்திற்காக இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் தென்மேற்கு பருவ மழை நம் தமிழகத்தில் சற்று தீவிரமாக காணப்பட்டதால் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு உள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு திடீரென்று போதை ஆசாமி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியது.

அதன்படி மது போதையில் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி 57 வயது மதிப்பு மகாலிங்கம் என்பவர் மேச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மேட்டூர் அணையில் குண்டு வெடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் எடுத்த நபர் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேட்டூர் அருகே நவப்பட்டியில் இருந்து செல்போன் பேசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

காலையில் காவேரி கிராஸ், எலி கரடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்போன் சிக்னல் மாறி மாறி சென்று கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. இறுதியில் பகல் ஒரு மணி அளவில் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே செல்போன் சிக்னல் காட்டியுள்ளது.

மேட்டூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது சம்பந்தப்பட்ட நபர் பெயர் மகாலிங்கம் என்பது தெரியவந்தது. மகாலிங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ் மேட்டூர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top