Connect with us

சென்னையில் குண்டுவெடிப்பு மிரட்டல்: சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை!

Tamil Nadu

சென்னையில் குண்டுவெடிப்பு மிரட்டல்: சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை!

b1294238d03ab54ef4e998df4c0f373b

சென்னையில் உள்ள ஆறு பிரபல ஹோட்டல்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்கள் குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையில் 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர் 

திநகரில் உள்ள பிரபல ஹோட்டல் உள்பட மொத்தம் ஆறு ஓட்டல்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததாகவும் குறிப்பாக இந்த ஆறு ஓட்டல்களிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெற்று வருவதாகவும் அந்த ஓட்டல்களை குறிவைத்தே மிரட்டல் வந்திருப்பதாகவும் சைபர்கிரைம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது 

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த 6 ஓட்டல்களிலும் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top