Connect with us

மசூதியில் பயங்கர சத்தம்;; மாலை நேரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு-30 பேர் உயிரிழப்பு!!!

bomb blast 1

செய்திகள்

மசூதியில் பயங்கர சத்தம்;; மாலை நேரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு-30 பேர் உயிரிழப்பு!!!

2022 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக அளவில் பெரும் அச்சம் நிலவியது. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபண்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் அங்கு மக்கள் நாட்டை விட்டு ஓடும் சூழ்நிலை உருவாகியது.

மேலும் பலரும் தங்களது தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு பெரும் இன்னலை சந்தித்தனர். ஏனென்றால் அவர்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல் விமான நிலையத்தை கைப்பற்றினர்.

மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு உடனடியாக அமெரிக்க வீரர்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதன்பின்பு ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை, அத்தியாவசிய தேவைகள் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் நிகழ்ந்தது.

மேலும் அங்கு உடல் உறுப்புகளை விற்பனை செய்து உணவு வாங்கும் சூழலும் நிலவியது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா உட்பட பல பல நாடுகளில் உணவுப் பொருட்களை வழங்கி உதவியது.

மேலும் அங்கு தினம் தோறும் துப்பாக்கி குண்டுகளின் சத்தமே கேட்டுக் கொண்டிருந்ததாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் கிடைத்தன. இந்த நிலையில் திடீரென்று ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதில் 30 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்ததுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

வழக்கமான மாலை நேர தொழுகையின் போது பலத்த சதத்துடன் குண்டுகள் வெடித்ததாக அங்குள்ள காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். குண்டுவெடிப்பில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அச்சமும் நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top