
பொழுதுபோக்கு
அஜித் நடித்த மாஸ் சீன்களை காப்பியடித்த பாலிவுட் படம்… யாரு அந்த ஹீரோ தெரியுமா?..
2015ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளியான படம் தான் வேதாளம். இயக்குனர் சிவா இயக்கத்தில் படத்தில் லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாகவும், ஸ்ருதி ஹாசன் அஜித்திற்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர் .இந்த படத்தில் சூரி, தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் .
தமிழில் வேதாளம் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கில் இந்த படத்தை தற்போது ரீமேக் செய்து வருகின்றனர். இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் ரஜினிக்கு தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்துள்ளார் , தமன்னா சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர்.
பாலிவுட்டில் வெளியான ‘heropanti 2’ படத்தில் உள்ள ஒரு காட்சி, அப்படியே வேதாளம் படத்தில் உள்ளது போலவே படமாக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் டைகர் ஷெராப் ஹீரோவாக நடித்திருக்க அவருக்கு வில்லனாக நவாசுதின் சித்திக் நடித்துள்ளார்.
பீஸ்ட் ஹீரோயினா இது?.. கிளாமர் போட்டோவில் மாஸ் அள்ளுதே!!..
இந்த சீசனை பார்த்த தமிழ் ரசிகர்கள், என்ன வேதாளம் படத்தை காப்பி எடுத்து வச்சிருங்கீங்க என கலாய்த்து வருகின்றனர்.
