Connect with us

லெஜண்ட் சரவணா ஜோடியாக பாலிவுட் நடிகை: இத்தனை கோடி சம்பளமா?

News

லெஜண்ட் சரவணா ஜோடியாக பாலிவுட் நடிகை: இத்தனை கோடி சம்பளமா?

b103a447edb6d442479b50dee5fb48f6

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜன்ட் சரவணன் அருள் அவர்கள் ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

உல்லாசம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஜேடி-ஜெர்ரி என்பவர்கள் இயக்கி வரும் இந்த திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலா என்பவர் நடித்து வருகிறார். இவருக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக 6 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே ரூபாய் 5 கோடி வாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ea90da707e889933f65a463b7411d542

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் ரூபாய் 4 கோடி செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான செட்டில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது என்றும், இந்த பாடல் காட்சியில் லெஜண்ட் சரவணன் மற்றும் ஊர்வசி நடனமாடினார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top