பாலிவுட் நடிகை பூணம் பாண்டே திடீர் மறைவு.. 32 வயதிலேயே உலக வாழ்வை முடித்த சோகம்

பாலிவுட் நடிகை பூணம் பாண்டே திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் இந்தி திரையுலமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. மாடலிங் துறையில் மிகவும் பிரபலமாக விளங்கிய பூணம் பாண்டே நஷா திரைப்படம் மூலம் இந்தி சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்து வந்தார்.

மேலும் கடந்த 2011 வருடம் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என பரபரப்பைக் கிளப்பியதன் மூலம் இந்தியா முழுவதும் அவர் கவனம் பெற்றார்.  சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக இருந்தார்.

பாலிவுட் தவிர “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் பூனம் பாண்டே நடித்துள்ளார். மேலும் லாக் அப் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பூனம் பாண்டே நடித்துள்ளார்.

புரோட்டா மாஸ்டரான பிரபல ஹீரோ.. பட வாய்ப்புகள் இல்லாதால் நடிகர் எடுத்த திடீர் முடிவு

32 வயதான பூணம் பாண்டேவுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார். இவரின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் பூனம் பாண்டேவின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,

“இன்றைய காலை எங்களுக்கு கடினமானது. எங்கள் அன்புக்குரிய பூனத்தை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் ஆழ்ந்த வருத்தத்தை அடைகிறோம். அவளுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொரு உயிரினமும் தூய அன்பையும் கருணையையும் சந்தித்தன. துக்கத்தின் இந்த நேரத்தில், நாங்கள் பகிர்ந்து கொண்ட எல்லாவற்றிலும் அவளை அன்புடன் நினைவுகூறுகிறோம்.“ என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை பூனம் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

நடிகை பூனம் பாண்டேவின் மறைவிற்கு பாலிவுட் திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.