வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!

பழங்காலத்து மக்களின் உடல் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் ஒன்று. இது அவர்களுக்கு ஒரு மருந்து பொருளாகவும் இருந்துள்ளது. நமது உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்ய வெற்றிலை மிக முக்கியமாக உள்ளது.

இது தவிர வெற்றிலைக்கு வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மையும் உள்ளது. அதிலும் வெற்றிலையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகினால் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

Betel leaves 1

வெற்றிலையை நன்கு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். சாப்பிட பின்பு பற்களில் உள்ள துகள்கள், பாக்டீரியாக்களால் வரும் துர்நாற்றம் , பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை தீர்க்கவே பெரும்பாலும் விருந்து முடிந்தவுடன் வெற்றிலை கொடுக்கப்படுகிறது.

தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கலாமா? முடி வளருமா?

முகத்தில் பருக்கள் இருப்பின் வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் முகத்தை தினமும் கழுவி வந்தால் முகப்பருக்கள் முற்றிலும் அகலும்.

வெற்றிலை கொதிக்க வைத்த நீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து தினமும் குளித்து வந்தால் தோல் அரிப்பு, சொறி சிரங்கு போன்ற தோல் விதமான நோய்களுக்கு நல்ல மருந்தாக அமையும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment